செய்திகள்

மராட்டிய என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் வேலை - கூகுள் நிறுவனம் வழங்கியது

Published On 2019-03-30 01:19 GMT   |   Update On 2019-03-30 06:01 GMT
மென்பொருள் போட்டியில் வென்ற மராட்டிய என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் வேலை வழங்கியது. #AbdullahKhan
மும்பை:

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா கான்(வயது21). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படித்து வருகிறார். அவர் இணையதளங்களில் நடத்தப்படும் மென்பொருள்(சாப்ட்வேர்) தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்வார்.

இந்தநிலையில், அவர் கூகுள் நிறுவனம் நடத்திய மென்பொருள் போட்டி ஒன்றிலும் கலந்து கொண்டார். அதன் மூலமாக அந்த நிறுவனம் அவரது திறமையை தெரிந்து கொண்டது. இதையடுத்து அவருக்கு கூகுள் நிறுவனம் வேலை வாய்ப்பு அளிக்க தயாராக இருப்பதாக அப்துல்கானுக்கு இ-மெயில் அனுப்பியது. அதைப்பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு கூகுள் நிறுவனம் நடத்திய ஆன்-லைன் தேர்வில் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவரை நேர்முகத்தேர்வுக்காக லண்டனுக்கு அழைத்து கூகுள் நிறுவனம் தேர்வு நடத்தியது. இதிலும் அவர் தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு வேலையை கூகுள் நிறுவனம் வழங்கியது.

அப்துல்கானுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்தை சம்பளமாக கொடுக்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. அவர் வரும் நவம்பர் மாதம் கூகுளில் பணியில் சேர உள்ளார். #AbdullahKhan
Tags:    

Similar News