செய்திகள்
காங்கிரஸ்

பிரியங்கா மீதான தாக்குதலை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்

Published On 2019-12-29 10:15 GMT   |   Update On 2019-12-29 11:29 GMT
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீதான தாக்குதலை கண்டித்து டெல்லியில் இன்று இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கைதான முன்னாள் போலீஸ் அதிகாரி தாராபுரியை சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காரில் சென்றர். அவரை போலீசார் 2 முறை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர் காரில் இருந்து இறங்கி அந்த அதிகாரியின் வீட்டுக்கு நடந்து சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

அப்போது பிரியங்காவை போலீசார் சூழ்ந்து கொண்டு தடுக்க முயன்றதாகவும், பெண் போலீசார் தன்னை தாக்கியதாகவும் பிரியங்கா குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை பெண் போலீஸ் அதிகாரி மறுத்து இருந்தார்.


இந்த நிலையில் பிரியங்கா தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் இன்று இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குள்ள உ.பி. பவன் முன்பு காங்கிரசார் திரண்டு வந்து போராட்டம் செய்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.

Tags:    

Similar News