இந்தியா

கோப்புப் படம் 

null

3 ஆண்டுகள், 8 மாதங்கள், 7 நாட்கள்: இந்தியாவிலேயே மிக தாமதமான ரெயிலை பற்றி தெரியுமா?

Published On 2024-12-09 11:59 GMT   |   Update On 2024-12-09 16:47 GMT
  • இந்த குறிப்பிட்ட ரெயிலானது 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் எடுத்துக்கொண்டது.
  • அந்த ரெயில் வழிதவறிச் சென்றது பின்னர் தெரியவந்தது.

ரெயில்கள் தாமதமாக புறப்படுவது, வந்து சேர்த்து எல்லாம் இந்தியாவில் படு சகஜமான மக்களுக்கு பழகிவிட்ட ஒரு விஷயம். 2, 3 மணி நேரங்கள் முதல் 1, 2 நாட்கள் வரைகூட ரெயில் தாமதம் குறித்து கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் இந்தியாவிலேயே அதிக தாமதமாக தனது பயணத்தை முடித்த ரெயில் சுவாரஸ்யமான ஒரு சமாச்சாரம். 42 மணி நேரத்தில் பயணத்தை முடிக்க திட்டமிடப்பட்ட இந்த குறிப்பிட்ட ரெயிலானது 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் எடுத்துக்கொண்டது.

இந்த நிலைமை 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தின் பஸ்திக்கு சென்ற சரக்கு ரெயிலுக்கு நிகழ்ந்துள்ளது.

 

2014 ஆம் ஆண்டு,பஸ்தியில் உள்ள தொழிலதிபரான ராமச்சந்திர குப்தா, விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.14 லட்சம் மதிப்பிலான டை- அமோனியம் பாஸ்பேட் (DAP) ஐ தனது வணிகத்திற்காக ஆர்டர் செய்தார்.

நவம்பர் 10, 2014 அன்று, 1,316 DAP சாக்குகள் ஒரு சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு திட்டமிட்டபடி புறப்பட்டது. ஆனால் ரெயில் வந்துசேர வேண்டிய நேரத்தில் வரவில்லை. ராம்சந்திர குப்தாவின் பல புகார்களுக்குப் பிறகு, ரெயில் வரும் பாதையிலேயே மாயமானதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த ரெயில் வழிதவறிச் சென்றது பின்னர் தெரியவந்தது. ரெயில் உள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் உள்ள ஒரு பெட்டி [bogie] பயணத்திற்குத் தகுதியற்றதாகக் கருதப்பட்டதால், ரெயில் நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருக்கிறது.

 

கோப்புப் படம் 

கடைசியாக ஜூலை 25, 2018 அன்றுதான் ரயில் பஸ்தி நிலையத்தை வந்தடைந்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சும்மா இருந்ததால் உரம் முற்றிலும் பாழானது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News