இந்தியா

5ஜி தொழில்நுட்பம்

5ஜி ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2022-06-15 11:45 IST   |   Update On 2022-06-15 11:45:00 IST
  • இந்தியாவில் வழங்கப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
  • 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புது டெல்லி:

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைளை டிராய் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த 5ஜி ஏலத்தை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

72,097.85 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை வரும் ஜூலை மாதத்திற்குள் நடத்தி முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் வழங்கப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News