இந்தியா

பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

Published On 2023-12-13 15:31 GMT   |   Update On 2023-12-13 15:31 GMT
  • பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசியதில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் கிடைத்தது.
  • இதுவரை இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.

இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,

தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.

பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் மேலும் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News