இந்தியா

5 வயது சிறுவன் கூட்டுப் பலாத்காரம்.. சுற்றி நின்று வீடியோ எடுத்த கொடூரம்

Published On 2024-09-30 06:37 GMT   |   Update On 2024-09-30 06:37 GMT
  • சிறுவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்
  • இருவரின் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்ட சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்

உத்தரப் பிரதேசத்தில் 5 வயது சிறுவனை பண்ணையில் வைத்து இரண்டு நபர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட, சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டபோது அவ்வழியே சென்றோர் காப்பாற்றாமல் நின்று வீடியோ எடுத்தது மனிதாபிமானத்தைக் கேள்விக்குள்ளாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் [Hapur] மாவட்டத்தில் சிறுவன் வசித்து வந்த வீட்டின் வருகே உள்ள பண்ணையில் வைத்து கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அவ்வூரை சேர்ந்த இருவர் சிறுவனை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த ஆடு மேய்ப்பர்கள் இருவர் சிறுவனை காப்பாற்றாமல் நின்று மனசாட்சியில்லாமல் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் சிறுவனின் உடல் நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவனின் உடலில் உள்ள காயங்களை வைத்து பெற்றோர் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக தவறு செய்த இருவரின் வீட்டுக்கு சென்று பெற்றோர் நியாயம் கேட்டுள்ளனர்.அதற்கு சிறுவனின் பெற்றோரை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்மூலமே இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் தப்பியோடிய நிலையில் அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது.

Tags:    

Similar News