ராமர்-அயோத்தி கோவிலின் படத்துடன் குஜராத்தில் தயாரிக்கப்பட்ட சிறப்பு சேலை
- விழாவுக்காக நாட்டின் முக்கிய ஜவுளி மையமான குஜராத்தின் சூரத் நகரில் சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டுள்ளது.
- அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது.
சூரத்:
அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டு குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த விழாவுக்காக நாட்டின் முக்கிய ஜவுளி மையமான குஜராத்தின் சூரத் நகரில் சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், ராமர் மற்றும் அயோத்தி கோவிலின் படங்கள் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு சேலையை தயாரித்த ஜவுளி தொழில் அதிபர் ராகேஷ் ஜெயின் அந்த சேலையை அங்குள்ள கோவிலுக்கு வழங்கினார். அதனை ஜவுளி துறை நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். அவர்கள் இந்த சேலை அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுபப்படும் என்றனர்.
மேலும் இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியாது என்பதால் நாங்கள் இங்கிருந்து சிறப்பு சேர்க்கும் வகையில் ராமர், அயோத்தி கோவில் படங்களுடன் சேலையை தயாரித்து வழங்கி உள்ளோம். இந்த சேலை சீதைக்கானது என்றனர்.