என்ன கொடும சார் இது.. பீகாரில் வயல்வெளிக்குள் தனிமரமாக நின்ற ரெயில் இன்ஜின் - வைரல் வீடியோ
- வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார்.
- ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.
பீகாரில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் கட்டப்பட்ட பாலம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத்பூர் கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளியில் ரெயில் இன்ஜின் பெட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை எந்த சம்பந்தமும் இல்லாமல் தனிமரமாகக் நின்று கொண்டிருத்தத்தை பார்த்து கிராமவாசிகள் திகைத்துள்ளனர்.
வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான நிகழ்வாக கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.
வாசிர்கஞ் ரெயில் நிலையத்தில் இருந்து எந்த பெட்டிகளும் இல்லாமல் வந்த ரெயில் இன்ஜின் கயா நோக்கி செல்லும் வழியில் தடம் புரண்டு வயல்வெளிக்குள் சென்றுள்ளதாக பின்னர் தெரிவியவந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரெயில் அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.