கம்மல் வாங்கி தராத கணவனை உயிரோடு எரித்த பெண்
- ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
- பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்
இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.