இந்தியா

10-ம் வகுப்பில் Fail-ஆன மாப்பிள்ளை வேண்டாம்.. திருமணத்தை அதிரடியாக நிறுத்திய மணப்பெண்

Published On 2024-11-21 14:06 GMT   |   Update On 2024-11-21 14:06 GMT
  • மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார்.
  • குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 17 ஆம் தேதி சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கும் 30 வயது இளைஞருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார்.

மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார். ஆகவே 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கறாராக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மணமகளிடம் பல மணிநேரம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடுமபத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News