இந்தியா

அதானியை உடனடியாக கைது செய்க... ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2024-11-21 07:38 GMT   |   Update On 2024-11-21 07:39 GMT
  • முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சரே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்?
  • பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருப்பதால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது பாதுகாவலர் மாதாபி பூரி புச் மீது விசாரணை நடத்த வேண்டும்.

* நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவது காங்கிரசின் கடமை.

* முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சரே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்?

* எதிர்க்கட்சி தலைவராக நான் மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்புவேன்.

* இந்தியாவில் அதானி கைது செய்யப்படமாட்டார். அல்லது விசாரணைக்கு உள்ளாக்கப்படமாட்டார். ஏனென்றால் அரசு அவரை காக்கிறது. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

* பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றாக இருந்தால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார்கள்.

* இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்டத்தை மீறியுள்ளார் என்பது நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மூலம் தெளிவாகியுள்ளது.

Tags:    

Similar News