நடிகை ஷில்பா ஷெட்டி மீது பதியப்பட்ட SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து
- ஷில்பா ஷெட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
- 2017 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.
தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
2013 ஆண்டு சல்மான் கானுடன் இணைந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஷில்பா ஷெட்டி பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் ஷில்பா ஷெட்டி பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக 2017 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், ஷில்பா ஷெட்டி மீது பதிவான SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஒரு சமூகத்தை இழிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டு, அந்த வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை என நீதிபதி அருண் மோங்கா கருத்து தெரிவித்தார்.