இந்தியா
வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து.. தயாரிக்கும்போது பிசிறு தட்டியதால் 3 பேர் பலி
- முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கயர்தலா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது
- சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் வீட்டில் நாடு வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கயர்தலா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மாமுன் மொல்லா என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு பெரும் வெடிச்சத்தம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் மாமுன் மொல்லா, சகிருல் சர்க்கார் மற்றும் முஸ்தாகின் ஷேக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடிவிபத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.