சிறுவனின் வயிற்றில் வளர்ந்த 2 கால்களை அகற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை
- உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பிறக்கும் போதே வயிற்றில் 2 கால்கள் வளர்ந்துள்ளது.
- இதனால் சிறுவனை பள்ளிக்கூடத்தில் பலர் கேலி செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், நான்கு கால்களுடன் பிறந்த 17 வயது சிறுவனின் தேவையற்ற 2 கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பாலியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பிறக்கும் போதே வயிற்றில் 2 கால்கள் வளர்ந்துள்ளது. இதனால் சிறுவனை பள்ளிக்கூடத்தில் பலர் கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் படிப்பை நிறுத்தியுள்ளான்.
இந்நிலையில், சிறுவனின் உடலில் தேவையின்றி வளர்ந்துள்ள 2 கால்களை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறையின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் அசுரி கிருஷ்ணா, "இரட்டையர்கள் கருத்தரிக்குபோது, அவர்களில் ஒருவரின் உடல் வளர்ச்சியடையாமல், அதன் உறுப்புகள் மற்ற குழந்தையின் உடலுடன் இணைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது" எபின்ரு தெரிவித்தார்.
உலகம் முழுவதும் நான்கு கால்களுடன் 42 பேர் மட்டுமே பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.