இந்தியா

மகா சிவராத்திரி கொண்டாடுவதில் சண்டை.. ஜார்கண்டில் கலவரம் - வாகனங்களுக்கு தீவைப்பு

Published On 2025-02-26 16:25 IST   |   Update On 2025-02-26 17:11:00 IST
  • தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
  • ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஜார்க்கண்டில் மகா சிவராத்திரி விழாவுக்கான அலங்கார பணிகளை மேற்கொள்வதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.

இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இச்சாக் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.

மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மற்றொரு சமூகத்தினர் அதை எதிர்த்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

இது கலவரமாக மாறி கடைகளுக்கு தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்களும் நடந்தன. இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், டெம்போ மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கடையையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக ஐபிஎஸ் ஸ்ருதி அகர்வால் தெரிவித்தார். மக்கள் அமைதியைக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

Tags:    

Similar News