கேரள மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டியதில்லை: சசி தரூர்
- கே. சுதாகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுள்ளது.
- அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த அர்த்தமும் இல்லை.
கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே. சுதாகரன் இருந்து வருகிறார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சீரமைக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி தலைவர் கே. சுதாகரன் கூட மாற்றப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கே. சுதாகரனை மாற்ற தேவையில்லை என திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-
கே. சுதாகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்ற வேண்டியதில்லை. சுதாகரன் தலைமையில் இடைத்தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த அர்த்தமும் இல்லை. அவரை தொடர்ந்து தலைவராக செயல்பட விட வேண்டும். அவருக்காக எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்னை பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டால், விசுவாசமான மற்றும் மேலிடத்திற்கு கீழ்படிவான ஒரு தொண்டனாக அவர்களது கட்டளைக்கு கீழ்படிவேன்" என சுதாகரன் தெரிவித்திருந்தார்.