இந்தியா
கர்நாடகா சட்டமன்றத்தில் MLA-க்கள் ஓய்வெடுக்க சோஃபாக்கள் வாடகைக்கு எடுக்க திட்டம்
- கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் உத்தரவு
- கர்நாடக மாநில சபாநாயகரின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு ஓய்வெடுக்க பிரத்யேக சோஃபாக்கள் வாடகைக்கு எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க வெளியில் செல்வதால் அவை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்காத சூழல் உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில், சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்க ரிக்லைனர்கள் வாங்க சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநில சபாநாயகரின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.