இந்தியா

ஆந்திராவின் துணை முதல்வர் ஆகிறார் பவன் கல்யாண்?

Published On 2024-06-07 06:27 GMT   |   Update On 2024-06-07 06:27 GMT
  • ஆந்திராவில் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ.க., பவன் கல்யாண் கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது.

வருகிற 12-ந் தேதி சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில் ஆந்திராவில் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் 25 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிகர் பவன் கல்யாணுக்கு துணை முதல் மந்திரி பதவி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் தகவல் தொழில்நுட்ப த்துறை அமைச்சராகவும், நடிகர் பாலகிருஷ்ணா திரைப்பட துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியல் உண்மையா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Tags:    

Similar News