இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிப்பு- பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Published On 2023-10-25 15:36 GMT   |   Update On 2023-10-25 15:36 GMT
  • கும்பாபிஷேக நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
  • கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு.

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், ரூ.2000 கோடி மதிப்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி அன்று நண்பகல் 12.30 மணிக்கு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மேலும், கும்பாபிஷேக நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.

கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அமைப்பினர் இன்று அழைப்பிதழை வழங்கினர்.

Tags:    

Similar News