இந்தியா

இந்தியாவில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆகஸ்ட் மாதத்தில் வெப்பநிலை உயர்வு

Published On 2024-09-01 11:19 IST   |   Update On 2024-09-01 11:19:00 IST
  • ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் நல்ல மழைப்பொழிவு பதிவானது.
  • ஆகஸ்ட் மாதத்தை போலவே செப்டம்பர் மாதமும் இயல்பை விட அதிகமான மழை பொழியும்.

இந்தாண்டு ஆகஸ்டு மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டில் தான் ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24.29 டிகிரி செல்சியஸ் வரை சராசரி வெப்பநிலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகும் சராசரி வெப்பநிலை 23.68 டிகிரி செல்சியஸ் ஆகும்.

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் நல்ல மழைப்பொழிவு பதிவானது. இதனால் உருவான மேகமூட்டமான சூழல் குறைந்தபட்ச வெப்பநிலையை இயல்பை விட அதிகமாக உயர்த்தியது. குறிப்பாக மத்திய இந்தியாவில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை போலவே செப்டம்பர் மாதமும் இயல்பை விட அதிகமான மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News