இந்தியா

கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி என பெயர் மாற்றியது அசாம் அரசு

Published On 2024-11-19 15:02 GMT   |   Update On 2024-11-19 15:04 GMT
  • அசாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
  • இதில் கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி என பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி என பெயர் மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, கபிகுரு ரவீந்திரநாத் தாகூர் நவீன கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி - மா லட்சுமியின் நிலம் என விவரித்தார். இன்று, அசாம் அமைச்சரவை நமது மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது.

மாவட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கை, மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News