இந்தியா

டிரக் மீது மோதி தடம் புரண்ட பயணிகள் ரெயில் - ஜார்க்கண்டில் பரபரப்பு

Published On 2024-11-19 13:31 GMT   |   Update On 2024-11-19 13:31 GMT
  • ரெயில் பெட்டி தடம் புரண்டதை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
  • விரைவில் இந்த பாதை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்.

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பயணிகள் ரெயிலின் பெட்டி ஒன்று டிரக் மீது மோதியதால் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் பெட்டி தடம் புரண்டதை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மதுப்பூர்-ஜசிதி பிரிவில் ரோஹினி நவாடி ரயில்வே கிராசிங்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தின் போது நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

"கேட்ஸ்மேன் ஒரு லெவல் கிராசிங்கின் தடையை குறைத்துக்கொண்டிருந்தபோது, டிரக் அதைக் கடந்து ரெயிலில் மோதியது. முதல் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டன. எனினும், உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை," என்று கிழக்கு ரெயில்வேயின் சி.பி.ஆர்.ஓ. கௌசிக் மித்ரா தெரிவித்தார்.

கிரேன் உதவியுடன் ரெயில் பெட்டியை தூக்குவதற்கு ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் இந்த பாதை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

Similar News