இந்தியா
பீகாரில் உதவி கலெக்டரை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதால் பரபரப்பு
- பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
- உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு.
உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தின் பலவேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடியில், அடையாளம் தெரியாமல் உதவி கலெக்டர் ஸ்ரீகாந்தை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சுற்றியிருந்த போலீசார் அவர் யார் தெரியுமா அவர்தான் உதவி கலெக்டர் என்று அடித்த போலீசாரிடம் விளக்கினர். பின்னர் அந்த இடத்தில் இருந்து உதவி கலெக்டர் சென்றார்.
உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.