இந்தியா

மோடி எதிரே அமர படித்துவிட்டு வரவேண்டும்: ராகுலை சாடிய மாதவி லதா

Published On 2024-06-09 12:06 GMT   |   Update On 2024-06-09 12:06 GMT
  • தெலுங்கானாவின் ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மாதவி லதா போட்டியிட்டார்.
  • இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்றார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவின் ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மாதவி லதா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் மாதவி லதா டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியால் நாடு சோர்ந்து போனதால்தான் மோடி மீண்டும் பிரதமர் ஆனார். விஸ்வ குரு பட்டத்தை அடையும் உயரத்திற்கு இந்தியாவை கொண்டு செல்ல மோடிஜி இந்த அமைச்சரவைக்கு முத்து மற்றும் வைரங்களை (அமைச்சர்களை) தேர்ந்தெடுத்துள்ளார் என தெரிவித்தார்.

அப்போது அவரிடம், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்விக்கு பதலளித்த மாதவி லதா, அவர் ஏதாவது கற்றுக் கொள்வார். மோடிக்கு எதிரே அமர, படித்துக் கற்றுக் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் மாதவி லதா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News