இந்தியா

ரஷிய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்.. ஒரே மாதத்தில் 2வது முறையாக குறிவைக்கப்பட்ட ரிசரவ் வங்கி

Published On 2024-12-13 05:29 GMT   |   Update On 2024-12-13 05:29 GMT
  • மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு மிரட்டல் வந்துள்ளது
  • மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என்று கூறிக்கொண்டார்.

மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

நேற்று [டிசம்பர் 12] மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலானது வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 

 

முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி [சி இஓ] என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

 

2008-ம் ஆண்டு நவமபர் 26 ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவார அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News