இந்தியா
ஆந்திராவில் பாரம்பரியத்தை நினைவூட்டும் மாட்டு வண்டி பொம்மைகள்
- மரத்திலான சிறிய வகை மாட்டு வண்டிகளை உருவாக்கினார்.
- மாட்டு வண்டி பொம்மைகள் வீடுகளில் அலமாரிகளில் அலங்கார பொருட்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், டக்குலூரூவை சேர்ந்தவர் கோட்டையா. பழங்காலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஜோடெட்லா என்ற மாட்டு வண்டியை விவசாயிகள் தங்களது பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
பிரபலமாக இருந்து வந்த மாட்டு வண்டி தற்போது அழிந்து வருகிறது.
இதனை மீண்டும் மக்களிடையே நினைவூட்ட கோட்டையா முடிவு செய்தார்.
அதன்படி மரத்திலான சிறிய வகை மாட்டு வண்டிகளை உருவாக்கினார். மாட்டு வண்டியில் விவசாயி அமர்ந்து இருப்பது போலவும், அவரது பின்பக்கத்தில் விவசாயி ஒருவர் பொருட்களை ஏற்றி செல்வது போலவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டுவண்டிகளை பலரும் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
இந்த மாட்டு வண்டி பொம்மைகள் வீடுகளில் அலமாரிகளில் அலங்கார பொருட்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.