இந்தியா
தேர்வின்போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி?- ஆய்வு செய்ய இருப்பதாக சிபிஎஸ்இ தகவல்
- கடினமான கழித்தல், கூட்டல், வகுத்தல், சராசரி போன்றவற்றில் மாணவர்கள் சிரமத்தை குறைக்க முடிவு.
- வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க குழு அமைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு.
அக்கவுண்ட் தேர்வுகளின்போது கடினமான கழித்தல், கூட்டல், வகுத்தல், சராசரி போன்றவற்றை மாணவர்கள் எளிதாக கையாளும் வகையில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைகள் பெறப்பட்டன. இதனால் அக்கவுண்ட் தேர்வுகளின்போது கால்குலேட்டர் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கென வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்காக நேரம் செலவழிக்காமல் செயல்திறனை அதிகரிக்க முடியும்.
ஏற்கனவே இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் கடந்த 2021-ல் இருந்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.