இந்தியா

ஆந்திராவில் வீடு தேடி சென்று உதவித்தொகை வழங்கிய சந்திரபாபு நாயுடு

Published On 2024-07-02 08:34 GMT   |   Update On 2024-07-02 08:34 GMT
  • முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.4000 ஆக உயர்த்தி உத்தரவுட்டார்.
  • தந்தையை இழந்த சிறுவர்களின் கல்வி செலவையும் ஏற்றார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

மாதம்தோறும் வீடுகளுக்கே உதவி தொகை வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டத்தை நேற்று அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது குண்டூர் மாவட்டம் மங்களகிரி பகுதியில் ஒரே வீட்டில் முதியவரும் அவருடைய விதவை மகளும் வசித்து வருகின்றனர்.

அவரது வீட்டுக்கு சந்திரபாபு நாயுடு சென்றார். அவர்கள் சந்திரபாபு நாயுடுவை வரவேற்று அவர்கள் டீ கொடுத்தனர். அதை வாங்கி குடித்த சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

அப்போது அவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் ஏழ்மை காரணமாக வீடு கட்ட முடியவில்லை எனவே வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சந்திரபாபு நாயுடு 3.8 சென்ட் நிலத்தில் வீடு கட்டி தரப்படும் என உறுதி அளித்தார். மேலும் முதியவரின் மகளின் 2 மகன்கள் தந்தையை இழந்த சோகத்தில் நின்று கொண்டிருந்தனர்.

சந்திரபாபு நாயுடு சிறுவர்களை அரவணைத்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுடைய கல்விச் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தார். இதனை கேட்டதும் அவர்கள் கண்ணீர் மல்க சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News