சந்திரசேகர ராவ் காணவில்லை என போஸ்டர் ஒட்டிய பா.ஜ.க.வினர்
- எதிர்க்கட்சித் தலைவராக உள்ள போதும் கஜ்வேல் தொகுதி பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.
- காணாமல் போன சந்திரசேகரராவை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநில முன்னாள் முதல் மந்திரியும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் கடந்த 3 முறையாக கஜ்வேல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.
சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள போதும் கஜ்வேல் தொகுதி பக்கம் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கஜ்வேல் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி தொழிலாளர்கள் சந்திரசேகரராவை காணவில்லை அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என தொகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சந்திரசேகர ராவ் அவரது முகாம் அலுவலகம், இந்திரா பார்க், சவுரஸ்தா பஸ் நிறுத்தம், அம்பேத்கர் சதுக்கம், கஜுவேல் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியவில்லை என போஸ்டரில் கூறியிருந்தனர்.
மேலும் காணாமல் போன சந்திரசேகரராவை கண்டுபிடித்து தர வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்திரசேகரராவை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.