இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஒற்றை இலக்க வாக்குகளை பெற்ற 6 வேட்பாளர்கள்

Published On 2025-02-08 21:41 IST   |   Update On 2025-02-08 21:41:00 IST
  • புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
  • இந்த தொகுதியில் மட்டுமே 6 வாக்காளர்கள் ஒற்றையிலக்க வாக்குகளை பெற்றுள்ளனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆறு வேட்பாளர்கள் ஒற்றையிலக்க வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர். அதிலும் ஈஸ்வர் சந்த் என்ற வேட்பாளர் பாரத்ராஸ்ட்ரா ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார். இவர் வெறும் 4 வாக்குகள் மடடுமே பெற்றுள்ளார்.

பீம் சேனா கட்சி சார்பில் போட்டியிட்ட சங்கா நந்த் பவுத், ராஷ்ட்டிரவதி ஜன்லோக் கட்சி வேட்பாளர் முகேஷ் ஜெயின், ராஷ்டிரிய மானவ் கட்சி சார்பில் போட்டியிட்ட நித்யா நந்த் சிங் ஆகியோர் தலா 8 வாக்குகள் பெற்றுள்ளனர்.

சுயேட்சை வேட்பாளர்கள் ஹைதர் அலி, பங்கஞ் சர்மா ஆகியோர் தலா 8 வாக்குகள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புது டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசததில் வீழ்த்தினார். வர்மா 30,088 வாக்குகள் பெற்ற நிலையில், கெஜ்ரிவால் 25999 வாக்குகள் மட்டுமே பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் 4,568 வாக்குகள் பெற்றார்.

Tags:    

Similar News