டெல்லி டூ கண்ணூருக்கு ரூ. 22 ஆயிரமா? பேசு பொருளான விமான டிக்கெட் விலை
- பதிவு மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
- அதிக விலையைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான குளிர்கால விடுமுறை சீசன் நெருங்கி வருவதால், பல வழித்தடங்களில் விமான டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பண்டிகைக் காலங்களில் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பது பேசு பொருளாகி வருகிறது.
அந்த வகையில், டெல்லியில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு நேரடி விமானத்திற்கு பயண கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது சமீபத்தில் வெளியிட்ட பதிவு மீண்டும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
டெல்லியில் இருந்து கண்ணூருக்கு விமான டிக்கெட்டுகளின் அதிக விலையைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்துள்ளார். ஸ்கிரீன்ஷாட்களின் படி நேரடி விமானங்களுக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ. 21,966 முதல் ரூ. 22,701 வரை குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "டெல்லியிலிருந்து கண்ணூருக்கு இண்டிகோவின் டிக்கெட் விலை 21ஆம் தேதி. நேரடி விமானம் ரூ.22,000! துபாய் செல்வது மலிவானது! இதைத்தான் ஏகபோகம் செய்கிறது" என்று அவர் தனது பதிவில் எழுதினார்.