இஸ்லாமியர்கள் குறித்து கருத்து.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய நிதின் கட்கரி
- மதச்சார்பின்மை இருப்பதில்லை என்று கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- மதச்சார்பின்மை முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முஸ்லீம் மக்கள் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 51 சதவீதத்தை அதிகரித்த நாடுகளில் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை இருப்பதில்லை என்று கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து பேசிய அவர், "நான் வரலாற்றை தான் உங்களிடம் கூறுகிறேன். இஸ்லாமியர் மக்கள் தொகை 51 சதவீதத்தை கடந்துள்ள நாடுகளில் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை முடிவுக்கு வந்துவிட்டன," என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவை பிரச்சினைக்குரிய விஷயங்களாக பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
இந்த வீடியோவில் மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இவரது கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.