இந்தியா
நீங்கள் ஒருநாள் முதல்வராவீர்கள்: அஜித் பவாரை வாழ்த்திய தேவேந்திர பட்நாவிஸ்
- மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர்கள் 24/7 என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம்.
- நான் மதியம் முதல் இரவு வரை பணியாற்றுவேன்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பதில் அளித்தார்.
அப்போது பட்நாவிஸ் கூறியதாவது:-
நீங்கள் (அஜித் பவார்) நிரந்தர துணை முதல்வர் என அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், ஒருநாள் நீங்கள் முதல்வராவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.
மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர்கள் 24/7 என்ற அடிப்படையில் பணியாற்றுகிறோம். அஜித் பவார் காலையிலேயே எழுந்துவிடுவார். அப்போதில் இருந்து மதியம் வரை பணியாற்றுவார். நான் மதியம் முதல் இரவு வரை பணியாற்றுவேன். அதன்பின் யார் பணியாற்றுவார் என்பது உங்களுக்கு தெரியும். ஏக்நாத் ஷிண்டே நள்ளிரவு தாண்டியம் பணியாற்றுவார்" என்றார்.
அஜித் பவார் ஆறு முறை மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.