இந்தியா

அமித் ஷா ராஜினாமா செய்தால் மட்டும் போதாது: அரசியலில் இருந்தும் விலக வேண்டும்- லாலு பிரசாத் யாதவ்

Published On 2024-12-19 12:38 GMT   |   Update On 2024-12-19 12:38 GMT
  • அமித் ஷா நமது மதிப்பிற்குரிய அம்பேத்கர் மீது வெறுப்பால் நிறைந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
  • அவரது பைத்தியக்காரத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித் ஷாவுக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு லாலு பிரசாத் யாதவ் பதில் அளித்து கூறியதாவது:-

அமித் ஷா பைத்தியமாகிவிட்டார். அவர் நமது மதிப்பிற்குரிய அம்பேத்கர் மீது வெறுப்பால் நிறைந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவரது பைத்தியக்காரத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உண்மையிலேயே கேபினட்டில் இருந்து அமித் ஷாவை நீக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதுமட்டும் போதாது, அரசியலில் இருந்தும் வெளியேற வேண்டும்.

இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News