இந்தியா

பெண் எம்.பி.க்கள் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பா.ஜ.க.வுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்

Published On 2024-12-19 10:35 GMT   |   Update On 2024-12-19 10:35 GMT
  • பாராளுமன்ற நுழைவாயிலில் பாஜக எம்.பி.க்கள் ராகுல் காந்தியை நுழைய விடாமல் தடுத்தனர்.
  • அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இரண்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்தனர்.

பாராளுமன்ற நுழைவாயிலில் ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பு எம்.பி.க்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த மோதலில இரண்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்தனர்.

ராகுல் காந்தி தள்ளி விட்ட காரணத்தினால்தான் இரண்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்ததாக பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் ராகுல் காந்தி செயலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பாராளுமன்ற ஸ்ட்ரீட் (Parliament Street) காவல் நிலையத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News