இந்தியா

மாரடைப்பால் மரணமடைந்த ஓட்டுநர்.. துணிச்சலாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய நடத்துனர்

Published On 2024-11-06 15:41 GMT   |   Update On 2024-11-06 15:41 GMT
  • ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து இருக்கையில் இருந்து சரிந்து விழுகிறார்.
  • ஓட்டுநர் இருக்கையில் அமரும் நடத்துனர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உயிரை காப்பாற்றினார்.

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பேருந்தை ஒட்டிக்கொண்டிருந்த போதே ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் நெலமங்கலவில் இருந்து தசனபுரா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையில் இருந்து சரிந்து விழுகிறார். ஓட்டுநர் இல்லாமல் பேருந்து தடுமாறுகிறது. அப்போது உடனடியாக ஓட்டுநர் இருக்கையில் அமரும் நடத்துநர் பேருந்தை லாவகமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

உயிரிழந்த ஓட்டுநர் பெயர் கிரண் குமார் என்று தெரியவந்துள்ளது. துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரை காப்பாற்றிய நடத்துநர் ஓபலேஷ்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News