இந்தியா
அருணாசல பிரதேசத்தில் நில நடுக்கம்
- அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டம் பான்ஜிங் கிராமத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நில நடுக்கத்தின்போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது.
அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டம் பான்ஜிங் கிராமத்தில் இன்று காலை சுமார் 8.50 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.0 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தின்போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.