முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல் - மகாராஷ்டிராவில் பரபரப்பு
- பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சரும், என்.சி.பி (எஸ்.பி.) தலைவருமான அனில் தேஷ்முக் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாக்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது காரின் மீது கற்கள் வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேஷ்முக் கட்டோல் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் பெல்பாட்டா அருகே தேஷ்முக்கின் கார் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசினர். தாக்குதலின் போது காயம் அடைந்த தேஷ்முக் உடனடியாக கடோல் சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
"இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியது. தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர்," என்று காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதா கூறினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இன்று பிரச்சாரம் நிறைவு பெற்றது. தற்போது தாக்குதலுக்கு ஆளான தேஷ்முக்கின் மகன் சலில் தேஷ்முக், கடோல் சட்டமன்றத் தொகுதியில் என்சிபி (சரத்சந்திர பவார்) சார்பில் பாஜகவின் சரண்சிங் தாக்கூரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.