இந்தியா

தீ விபத்தில் ரசாயன ஆலை முற்றிலும் எரிந்துள்ள காட்சி.

ஐதராபாத் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் பலி

Published On 2024-04-04 04:55 GMT   |   Update On 2024-04-04 05:58 GMT
  • தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூர் எனும் ஊரில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென ரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது.

தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News