இந்தியா

புத்தமத துறவி தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

Published On 2025-02-14 02:39 IST   |   Update On 2025-02-14 02:39:00 IST
  • தலாய் லாமாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
  • அவரது பாதுகாப்புப் பணியில் 35 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவர்.

புதுடெல்லி:

இந்தியாவில் உள்ள திபெத்தைச் சேர்ந்தவர் புத்த மதத் துறவி தலாய் லாமா. இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தலாய் லாமாவுக்கு சி.ஆர்.பி.எப். படையினரால் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடிவெடுத்திருப்பதக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தலாய் லாமாவுக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 35 முதல் 40 கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News