இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: 200 சாலைகள் மூடல்

Published On 2024-12-25 07:56 GMT   |   Update On 2024-12-25 07:56 GMT
  • ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ மலை போல் ஆன சிம்லா
  • வாகனம் சறுக்கி விழுந்த விபத்துகளால் 4 பேர் பலி

சிம்லா:

இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு குளிர் பல நேரங்களில் மைனஸ் டிகிரிக்கும் சென்றுவிடும். இதனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

திருமணமான புது தம்பதிகள் தங்களின் தேன்நிலவை கொண்டாட அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

இங்குள்ள மலை பிரதேசங்களில் பனிகள் படர்ந்து வெள்ளியை சிதறிவிட்டது போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதை யொட்டி சிம்லாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஒயிட் கிறிஸ்துமஸ் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

இதனால் அங்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கி சறுக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

பயணிகளின் வருகையை குறைக்கவும் மேலும் உயிரிழப்புகளை தடுக்கவும் சிம்லாவை சுற்றி உள்ள 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 223 சாலைகளை அந்த மாநில அரசு மூடியுள்ளது.

சிம்லாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை குறிப்பாக சனிக்கிழமை உச்சக்கட்ட பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Tags:    

Similar News