இந்தியா

கைதிக்கு போலீஸ் நிலையத்தில் ராஜ மரியாதை- 7 பேர் சஸ்பெண்டு

Published On 2024-11-10 06:45 GMT   |   Update On 2024-11-10 06:46 GMT
  • அனில் குமாரை அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்தனர்.
  • போலீஸ் நிலையத்தில் கைதிக்கு ராஜ மரியாதை செய்ததாக இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

ஆந்திரா மாநிலம் ராஜ மகேந்திரவரத்தை சேர்ந்தவர் அனில் குமார். பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தார் மற்றும் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டார்.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் அனில் குமாரை கைது செய்து ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைத்தனர். கடந்த வாரம் வேறொரு வழக்கு சம்பந்தமாக போலீசார் அனில் குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்தனர். லாக்கப்பில் வைத்து விசாரணை நடத்த வேண்டிய அனில் குமாருக்கு அங்குள்ள மேஜையில் தலையணையுடன் கூடிய படுக்கையை ஏற்பாடு செய்தனர்.

மேலும் அனில் குமாரை அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்தனர். அனில் குமார் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சத்தமாக போலீசாருக்கு உத்தரவிடும் காட்சிகளும் போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

போலீஸ் நிலையத்தில் கைதிக்கு ராஜ மரியாதை செய்ததாக இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஒரு வாரத்தில் இறுதி அறிக்கை வந்தவுடன் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் 7 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News