இந்தியா
ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய்க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம்
- மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர்.
- ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.
சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தீர்மானத்தை தாக்கல் செய்ய, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாகன் புஜ்பா், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் வடேட்டிவார் ஆகியோர் ஆதரித்து பேசினர்.
மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர். அவர்கள் மகாத்மா காந்தி மற்றும் மகாத்மா பூலே என அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தெரிவித்தார்.
ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.