இந்தியா

அம்பேத்கர், பூலே பிறந்த மகாராஷ்டிராவில் மனுதர்ம சாஸ்திரத்திற்கு இடமில்லை - அஜித் பவார்

Published On 2024-06-27 09:18 GMT   |   Update On 2024-06-27 09:18 GMT
  • மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை
  • மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை

மகாராஷ்டிரா பள்ளி பாடபுத்தங்களில் மனுதர்ம சாஸ்திரங்கள் சேர்க்கப்படும் என்று தகவலை அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "மனுதர்ம சாஸ்திரத்தை மஹாராஷ்டிரா அரசு ஆதரிக்கவில்லை. மனுதர்ம சாஸ்திரத்திற்கு மகாராஷ்டிராவில் இடமில்லை. மனுஸ்மிருதியை பாடத்தில் சேர்க்கும் எண்ணமே இல்லை. இது அம்பேத்கர், பூலே போன்றோர் பிறந்த பூமி. இவர்களின் முற்போக்கு சிந்தனைகளை செயல்படுத்துவதில் பெயர் பெற்ற மாநிலம் மகாராஷ்டிரா" என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவார் இவ்வாறு பேசியிருப்பது பாஜக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News