இந்தியா

டிராபிக் போலீஸ் கட்அவுட்டை பார்த்து பயந்து ஹெல்மெட் மாட்டிய வாகன ஓட்டி - வைரல் வீடியோ

Published On 2024-06-27 13:30 GMT   |   Update On 2024-06-27 13:30 GMT
  • இதை பைக்கில் வந்தவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
  • அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் டிராபிக் போலீஸ் வாகனம் மற்றும் டிராபிக் போலீஸ் இருப்பதை பார்த்த 2 சக்கர வாகன ஓட்டி ஒருவர் தனது ஹெல்மெட்டை எடுத்து அவசரமாக தலையில் மாட்டுகிறார். பின்னர் பக்கத்தில் போன பின்புதான் அது உண்மையான போலீஸ் இல்லை போலீஸ் கட்அவுட் என்று தெரியவருகிறது.

இதை பைக்கில் வந்தவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாகன விபத்துக்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், அதை குறைப்பதற்காக போக்குவரத்துத்துறை மேற்கொண்டுள்ள இந்த வித்தியாசமான முயற்சியை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News