இந்தியா
கனமழையில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: நிவாரணம் அறிவித்த டெல்லி அரசு
- டெல்லியில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- இரு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. கனமழையால் டெல்லியில் வெள்ளம் சூழ்ந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் டெல்லியில் இன்னும் இரு நாட்களுக்கு கனமழை தொடரும்.
இதற்கிடையே, டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் 228.1 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.