இந்தியா
நெருங்கும் சந்திரயான்-3: நிலவில் தரையிறங்கவுள்ள இடத்தை படம்பிடித்த விக்ரம் லேண்டர்
- கடந்த 15ம் தேதி விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
- நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை சற்று நேரத்தில் மேலும் குறைக்கப்படுகிறது.
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எடுத்த புதிய புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நிலவில் தரையிறங்கவுள்ள இடத்தை லேண்டர் படம்பிடித்துள்ளதாக தகவல்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆகஸ்டு 9ம் தேதி விக்ரம் லேண்டர் பிடித்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை சற்று நேரத்தில் மேலும் குறைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.