இந்தியா

இரு அவைகளிலும் நீட் பிரச்சனையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்: பதில் கொடுக்க தயார் என்கிறது அரசு

Published On 2024-06-27 15:44 GMT   |   Update On 2024-06-27 15:44 GMT
  • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.
  • அப்போது நீட் தொட்பான பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேப்பர் லீக், கருணை மதிப்பெண் ஆகியவற்றால் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் மாணவர்கள் நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தொடர்பாக பிரச்சனையை எழுப்புவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் நடைபெற்றது. அப்போது நீட் பிரச்சனை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாக மத்திய மந்திர தர்மேந்திரா பிரதான் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் பிரச்சனை தொட்பாக நாங்க் நோட்டீஸ் வழங்குவோம் என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார்.

மேலும் நீட் பிரச்சனையுடன் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துதல், ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்துடன் ஆகிய பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாவத்தின்போது பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கட்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஒன்று கூட இருக்கிறார்கள்.

Tags:    

Similar News