OTP வருவதில் தாமதம் ஏற்படலாம்.. அமலுக்கு வரும் டிராயின் புது விதிமுறை..!
- போலி குறுந்தகவல்களை கட்டுப்படுத்த மாற்றங்கள்.
- குறுந்தகவல்களை டிராக் செய்யும் வசதியை வழங்க உத்தரவு.
இந்தியாவில் பல்வேறு துறைகளை பாதிக்கும் பல்வேறு ஒழுங்குமுறை மாற்றங்கள் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இதில் ஒருமுறை அனுப்பப்படும் போலி குறுந்தகவல்களை கட்டுப்படுத்த மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது.
அதன்படி தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கொண்டுவரப்போகும் புதிய கட்டுப்பாடு மோசடி செய்பவர்களுக்கு பொது மக்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் தகவல்களை வழங்க செய்யும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) கண்டறியும் வகையில் டெலிகாம் நிறுவனங்களிடம் குறுந்தகவல்களை டிராக் செய்யும் வசதியை வழங்க உத்தரவிட உள்ளது.
இந்த உத்தரவுக்கு டெலிகாம் நிறுவனங்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இணங்க வேண்டும். முன்னதாக இந்த காலக்கெடு அக்டோபர் 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருந்தது. எனினும், டெலிகாம் நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
டெலிகாம் நிறுவனங்கள் இந்த கோரிக்கைக்கு இணங்க தவறினால், பயனர்கள் OTP-க்களை பெறுவது தாமதமாகலாம்.