இந்தியா

மோடி சென்று பிரியாணி சாப்பிடலாம், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல கூடாதா? - தேஜஸ்வி யாதவ்

Published On 2024-11-28 16:10 GMT   |   Update On 2024-11-28 16:10 GMT
  • விளையாட்டில் அரசியல் செய்வது நல்ல விஷயம் அல்ல.
  • இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வேண்டும்.

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் (மற்றொரு நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்) என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறி வந்தது.

ஆனால் எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது. அத்துடன் தொடருக்கான வரைவு அட்டவணையை வெளியிட்டது. இதனால் பாகிஸதானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என இந்திய அணி, தனது முடிவை ஐ.சி.சி.க்கு கடிதம் மூலம் தெரிவித்தது.

இதனால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்ற தகவல் குறித்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், "விளையாட்டில் அரசியல் செய்வது நல்ல விஷயம் அல்ல. இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வேண்டும். மற்ற அணிகள் இந்தியாவுக்கு பயணம் செய்து விளையாட வேண்டும் இல்லையா?

எல்லா நாடுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லையா?... ஏன் இந்தியா அங்கு (பாகிஸ்தான்) செல்லக்கூடாது? ஆட்சேபனை இருக்கிறது என்றால் என்ன? பிரதமர் அங்கு (பாகிஸ்தான்) சென்று பிரியாணி சாப்பிடலாம் என்றால் அது நல்லது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்தால் அது நல்லதில்லையா?

Tags:    

Similar News